அரசியலுக்கு வருகிறார் நடிகர் கமல்? ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை!

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.

Actor Kamal Haasan to eneter Politics?

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார் கமல். அண்மைக்காலமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தமக்கு அரசியல் சரிப்பட்டு வராது என கமல் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்ப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதனால் கமல்ஹாசன் அரசியல்பிரவேசத்தை அறிவிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+