Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி அவானி சதுர்வேதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி அவானி சதுர்வேதிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி அவானி சதுர்வேதிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார்.

Actor Kamal haasan greets Avani Chaturvedi the first lady fighter pilot

இதன்மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றார். முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுள்ள அவானி சதுர்வேதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டிலேயே முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதிக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் தனியாக போர் விமானத்தை இயக்கியுள்ளார். அவரை போல் இன்னும் பலர் இத்துறைக்கு வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழர் வாழ்த்து நேர்மையானது. உணர்வுபூர்வமானது. பெருமை கொள்வீர் எம் பெருமைக்குறிய பறக்கும் பாவையாரே என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+