அரசியல் பிரவேசம்: சென்னையில் 1800 ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை
அரசியல் பிரவேசம் தொடர்பாக சென்னையில் ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை: அரசியல் பிரவேசம் தொடர்பாக சென்னையில் 1800 ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.
நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாக தமிழக அரசை மிகக் கடுமையாக சாடினார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கடுமையாக பதிலடி கொடுத்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என பேசினார். ஆனால் கமல்ஹாசனோ இதைத்தான் நான் முன்னரே சொல்லி வருகிறேன் என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தமக்கான பிரசார களமாக்கிக் கொண்டார் கமல்ஹாசன். அப்போது நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என பிரகடனம் செய்தார்.

அரசியல் கட்சி தொடக்கம்?
வார இதழ் ஒன்றில் தொடரை எழுதி வரும் கமல்ஹாசன் வரும் 7-ந் தேதி முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார். அப்படியானால் 7-ந் தேதி அரசியல் கட்சியை தொடங்குகிறாரா கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கும் ட்விட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.

ஆப் வெளியீடு?
மேலும் தமது நற்பணி மன்றத்தினரை ஒருங்கிணைக்க ஆப் ஒன்றை நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.

அரசியல் பிரவேசமா?
தமிழகம் முழுவதும் இருந்து 1,800 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது அரசியல் பிரவேசம், ஏரி, குளங்களை தூர் வாருதல் தொடர்பாக ஆலோசித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications