தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும்- பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் ஆதரவு!
பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை தீபிகாபடுகோனை பாதுகாக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தை இயக்குநர் பன்சாலி உருவாக்கியுள்ளார். ஆனால் இப்படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு.

தற்போது இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. நடிகை தீபிகாபடுகோனே, இயக்குநர் பன்சாலி ஆகியோர் தலைக்கு அதிகபட்சமாக ரூ10 கோடி என உச்சகட்ட வெறியையும் வெளிப்படுத்தியுள்ளனர் இந்து அமைப்புகள்.
இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில்,
I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat
— Kamal Haasan (@ikamalhaasan) November 20, 2017
தீபிகாபடுகோனை நாம் பாதுகாக்க வேண்டும். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமான தீபிகாவின் சுதந்திரத்தை நாம் மறுக்கக்கூடாது.
என்னுடைய படத்துக்கும் கூட எதிர்ப்புகள் வந்துள்ளன; வன்முறையுடன் கூடிய எந்த விவாதமுமே மோசமானது. நாங்கள் போதுமான அளவு சொல்லிவிட்டோம். இனி யோசித்து விழித்தெழ வேண்டிய தருணமிது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications