உத்தம வில்லனில் இந்து மதத்தை அவமதிக்கும் பாடல்? – கமல்ஹாசனின் உருவ பொம்மை எரிப்பு
சென்னை: உத்தமவில்லன் திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடிகர் கமல்ஹாசனின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி பெற்று நடந்த போராட்டத்தின்போது உருவ பொம்மையை எரித்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.
உத்தமவில்லன் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் தொடர்ந்த வழக்கில் கமல் படத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் இந்தப் போராட்டம் நடந்தது.

உத்தமவில்லன்
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள படம் உத்தம வில்லன். இந்தப் படம் நாளை வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நேற்று தொடங்கி விட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்து அமைப்புகள் போர்க்கொடி
இந்தப் படத்துக்கு இந்து அமைப்புகள் சில போர்க்கொடி உயர்த்தியுள்ளன. உத்தமவில்லன் படத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் பாடல் இடம் பெற்றுள்ளதாக அவை கூறி வருகின்றன.

தடை விதிக்கக் கோரி போராட்டம்
அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டம்
நேற்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகில் உத்தமவில்லன் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொடும்பாவி எரிப்பு
போலீஸ் அனுமதியுடன் நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. போலீசார் அதை தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications