நவ. 7-ல் அரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்!
தனது பிறந்தநாளில் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமது பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதியன்று புதிய அரசியல் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்க உள்ளார். சென்னையில் இன்று கமல்ஹாசனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் நவம்பர் 7-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என கமல்ஹாசன் கூறியதாக ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். இந்த தகவலை இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் டெங்குவுக்கு எதிராக களப்பணியாற்றவும் கல்வி சார்ந்த நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் கமல் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் அரசியல் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல்வாதிகள் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வரும் அவர் விரைவில் அரசியலுக்கு வந்ததே தீருவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு என்பது அரசியல் பிரவேசம் குறித்தே இருக்கும் என தெரிகிறது. கமலின் பிறந்த நாள் நவம்பர் 7 ஆம் தேதி என்பதால் அடுத்த மாதம் தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
பள்ளிக் கல்வி துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா?











Click it and Unblock the Notifications