கமல் தலைப்பு செய்தியாகலாம்.. தலைவராக முடியாது.. தமிழிசை தடாலடி!

நடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாகலாம் ஆனால் தலைவராக முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமல் தலைப்பு செய்தி தான் ஆக முடியும்.. தலைவராக அல்ல..!!

    சென்னை: அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாகலாம் ஆனால் தலைவராக முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். காலையில் அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற அவருக்கு கலாம் குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர்.

    கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிர்வாதம் பெற்ற கமலுக்கு கலாமின் பேரன் சலீம் நினைவுப்பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தனது கட்சிப் பெயரையும் சின்னத்தையும் அறிவிக்கிறார் கமல்ஹாசன்.

    அவசரமாக கட்சி தொடக்கம்

    அவசரமாக கட்சி தொடக்கம்

    கமலின் அரசியல் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல் சினிமாத்துறையினர் அரசியலில் ஈடுபடுவதில் ஏற்பட்டுள்ள போட்டியை தொடர்ந்து அவசர அவசரமாக கட்சியை தொடங்குவதாக கூறினார்.

    நடிகர்கள் அவசியம் இல்லை

    நடிகர்கள் அவசியம் இல்லை

    அனைத்து அரசியல் தலைவர்களுமே களத்தில் தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். நடிகர்கள் வந்து தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.

    தலைவராக முடியாது

    தலைவராக முடியாது

    இவர்கள் கட்சி தொடங்குவது தலைப்புச் செய்தியாகலாம் ஆனால் தலைவர்களாக இவர்களால் ஒருபோதும் தலைவராக முடியாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

    கையில் அதிகாரம் இருந்தபோது

    கையில் அதிகாரம் இருந்தபோது

    ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை கையில் அதிகாரம் இருக்கும்போது ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, தற்போது அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதால் பயனில்லை என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+