• search

6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும்... கமல் சொன்ன புத்திமதி!

By Gajalakshmi
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
      திராவிட அரசியல் செய்வதாக அறிவித்த கமல் கட்சி பெயரில் திராவிடத்தை காணவில்லை ஏன்? | Oneindia Tamil

      மதுரை : ஓட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள், ஓட்டுக்கு 6 ஆயிரம் வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சமே கிடைத்திருக்கும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

      கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து மதுரை ஒத்தகடை மாநாட்டில் உரையாற்றிய கமல் பேசியதாவது : எனது கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன் தரமான கல்வி எல்லாத்தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். சாதி, மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். என்ன நடக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருப்போம். மின்சாரம் கிடையாது என்று சொல்ல வேண்டிய அவசியம்இல்லை, ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்

      Actor Kamalhaasan says he will not give money for voters

      பற்றாக்குறைகள் வந்ததற்கு காரணம் பேராசையால் வந்தது. கைதட்ட வேண்டாம் மக்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது, இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தோம். ஐயா ஓட்டிற்கு 6 ஆயிரம் தருகிறார்கள் நீங்கள் தருவீர்களா எனக் கேட்டால் நான் தரமாட்டேன். எங்களிடம் பணம் இல்லை அப்படியே பணம் இருந்தாலும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். 6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும்.

      உங்களுடைய ஓட்டின் விலை தெரியாமல் அதை அடிமாட்டிற்கு விற்றுவிட்டீர்கள். வியாபாரமாக இருந்தாலும் நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள், நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும். 6 ஆயிரத்தை 5 வருடத்திற்கு வகுத்துப் பாருங்கள் ஒரு நாளைக்க 90 பைசாவோ என்னவோ தான் வரும்.

      வருஷம் பூரா அவரிடம் நீங்கள் போய் எதுவும் கேட்க முடியாது. அவரிடம் கேட்டால் காசு வாங்கல வாயை பொத்திக் கொண்டு போ என்பார்கள். திருடன் என்று சொல்லும் போது தலை தெறிக்க ஓட வேண்டாமா, பின்னால் திரும்பி பார்த்து என்ன கூப்பிட்டது போல இருக்கிறது என்றால் எப்படி அதை தான் டுவிட்டரில் போட்டேன், இனியும் இந்த நிலை வரக் கூடாது என்று கமல் பேசினார்.

      திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

      English summary
      Actor Kamalhaasan says he will not give money for voters, if voters not get Rs. 6 thousand for votes then within 5 years sure they will get 6 lakhs.

      நாள் முழுவதும் oneindia
      செய்திகளை உடனுக்குடன் பெற

      We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more