இது விடை காணும் வேளை.. கூடி யோசிப்போம்.. கமல்ஹாசன் அழைப்பு!
நீட் தேர்வு பற்றி நீட்டி முழக்காமல் விடை காண வேண்டிய வேளை என்பதால் அனைவரும் கூடி யோசிப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் டுவீட்டியுள்ளார்.
சென்னை : நீட் தேர்வு நம் சந்ததியின் எதிர்காலம் என்பதால் கூடி யோசிப்போம், நீதியை வெல்வோம் என்று நடிகர் கமல்ஹசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனிதா மரணத்தையடுத்து நீட் தேர்விற்கு தடை கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் வெகுண்டெழுந்து போராடி வருகின்றனர். பல மாவட்டங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லயோலா கல்லூரி மற்றும் ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிண்டி கத்திப்பாரா அருகே மறியல் போராட்டம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் என தமிழகம் மாணவர்களின் போராட்டக் களமாகியுள்ளது.
Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2017
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நீட் விலக்கு குறித்து டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனிதாவின் மரணம் இனியும் நடக்கக் கூடாது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நெகிழ்ந்திருந்தார் கமல்ஹாசன். நீட் குறித்து எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் தீர்வு சொல்லியிருப்பேன் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய டுவீட்டில் இது விடை காண வேண்டிய வேளை என்று கூறியுள்ளார். இது எதிர்கால சந்ததியினரின் பிரச்னை என்பதால் கூடி யோசிப்போம் என்று கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தாக கருத்தில் கொள்ளலாம். புத்திசாலித் தனமாக செயல்பட்டால் சட்டத்தையும் செல்லலாம் என்பதும் அவரது டுவீட்டின் உள்சாராம்சமாக பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications