கமலின் முதல் அரசியல் அறிக்கை...ஒரே மணி நேரத்தில் பத்தாயிரம் லைக்ஸ், 6 ஆயிரம் ரீடுவீட்களை அள்ளியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்தும் வாக்காளர்களுக்கும் விடுத்த அறிக்கை ஒரு மணி நேரத்திலேயே 11 ஆயிரம் லைக்குகளை அள்ளியது.

அதிமுகவின் நடவடிக்கைகள் எல்லாம் நள்ளிரவில் நடந்தது என்றால் நடிகர் கமல்ஹாசனின் அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக இரவு 8 மணிக்கு வெளிவந்துகொண்டிருக்கிறது. நேற்றைய டுவிட்டர் பதிவில் கமல் என்ன சொல்ல வந்தார் என்று தெரியாமல் குழம்பிப் போனவர்களுக்கு இன்றைய அறிக்கை தெளிவை தந்திருக்கும்.

Kamal hassan's Riddle Tweets on Politics-Oneindia Tamil

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி கிண்டல் செய்த சீனியர் அரசியல்வாதிகளை போட்டுத் தாக்கியுள்ளார் கமல்ஹாசன். மேலும் ஒரு அரசியல்வாதி என்பதை உணர்த்தும் விதமாக முதல் அரசியல் அறிக்கையிலேயே வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோளை கமல்ஹாசன் விடுத்துள்ளார்.

எங்கும் ஊழலில் திளைத்து சிக்கி சின்னாபின்னாகி வரும் மக்களுக்கு கமலின் இந்த அறிவிப்பு உத்வேகம் தந்துள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்ட முதல் அரசியல் அறிக்கை பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே 11 ஆயிரம் லைக்குகளையும், 6 ஆயிரம் ரீடுவீட்டுகளையும் பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhassan's political statement score newrly 11K likes and 6.8K retweets within an hour and more than 2K messages filled in his inbox.
Please Wait while comments are loading...