நடிகர் கார்த்திக்கு திடீர் உடல் நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி !
சென்னை: பிரபல நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்திக். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, கிழக்கு வாசல்,பொன்னுமணி உள்ளிட்ட படங்களில் பிலிம்பேர் விருது வாங்கியுள்ளார். தொடந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். கலைமாமணி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் நந்தி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வேளையில் திடீரென அரசியலிலும் நுழைந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவரானார். தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார் கார்த்திக்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்போம். கடந்த தேர்தலில் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் போனது. முதல்வர் ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்ற குணம் உள்ளவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நேற்றிரவு, 9:00 மணிக்கு, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications