"தனிமைச் சிறை"யில் கருணாஸ்?
கூவத்தூர் ரிசார்ட்டில் கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிலையில் உள்ளாராம் நடிகர் கருணாஸ்.
சென்னை: கூவத்தூரில் அடைபட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் கருணாஸை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் அங்கு அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்குமே கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.
அங்கு அது நடக்கிறது, இது நடக்கிறது என்ற செய்திகள்தான் வருகிறதே தவிர எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரு ஆம்புலன்ஸ் வேறு உள்ளே போயிருக்கிறது.

கருணாஸ் குழப்பம்
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் கூவத்தூர் முகாமில் பெரும் குழப்ப மன நிலையில் உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்பாட்டு நாயகன்
கருணாஸ்தான் உள்ளே வந்தது முதல் பல்வேறு வகையான ஏற்பாடுகளை எம்.எல்.ஏக்களுக்கு செய்து வந்தார். பாட்டுப் பாடினார், டான்ஸும் ஆடினாராம். அவரது ஆட்டம் பலருக்கும் குஷியைக் கொடுத்து அவர்களையும் கூட ஆட வைத்ததாம்.

என்னாச்சு இப்போ
ஆனால் இப்போது அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டனராம் அதிமுக நிர்வாகிகள். அவரை தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனராம். அங்கிருந்து அவரை நகர அனுமதிப்பதில்லையாம். எந்த ஆலோசனைக்கும் அவரைக் கூப்பிடுவதில்லையாம்.

அணி மாறத் திட்டமா
கருணாஸ் மன நிலையில் மாற்றம் வந்து விட்டதாக சந்தேகம் வந்து விட்டதாம் மேலிடத்திற்கு. இதனால்தான் அவரை ஒதுக்கி விட்டனராம். மற்றவர்களுடன் அவரை கலந்து பேச விடுவதில்லையாம். எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லையாம்.
இதன் காரணமாக பெரும் மன வருத்தத்துடனும், குழப்பத்துடனும் உள்ளாராம் கருணாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications