அன்பு பெயரை சொல்லாத கருணாஸ் எம்எல்ஏ... இரட்டை இலை தீர்ப்பு பற்றி மூச்சு விடலையே?
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அணிக்கு கிடைத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.
செங்கோட்டை: கந்து வட்டி கொடுமை பற்றி பேசிய கருணாஸ் எம்எல்ஏ, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய தீர்ப்பு குறித்து பதிலளிக்க மறுத்து விட்டார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் கந்துவட்டி கொடுமை மிகபபெரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
சசிகுமார் மரணமும் கந்துவட்டி கொடுமை குறித்து மிகபெரிய அதிர்வலைகளையம்,மனவேதனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.சினிமாதுறை ஸ்தம்பித்துப் போயுள்ளது.

கருணாஸ் பேட்டி
கந்து வட்டி கொடுமையை சினிமாத் துறையில் ஒழிக்க தமிழக சினிமாத்துறையிலுள்ள அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைந்து வரைமுறைப்படுத்தவேண்டும்,அதுவரை இந்த மரணம் தொடரும். சினிமாவை யாரும் சொந்தமாக பணம் போட்டு எடுக்கமுடியாது. பெரியநிறுவனங்களால் மட்டுமே எடுக்க முடியும்,நடிகர்களின் அறுதி பெரும்பான்மை சம்பளம் கொடுக்க முடியாததாலும் இந்த நிலை.

இணையத்தில் சினிமா
தமிழ் சினிமா அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தமிழக அரசு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இந்திய சினிமாவில் கேரளா,ஆந்திர,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழ் சினிமாவில் மட்டுமே திரைப்படம் வெளியான உடனே திருட்டு விசிடிக் கள், இன்டர்நெட் மூலமும் படங்கள் வெளிவருகின்றது.

பெண்களை இழிவுபடுத்துவதா
தமிழ் சினிமாவை காப்பாற்றவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. கந்துவட்டியை சினிமாத்துறையில் கட்டுப்படுத்த வேண்டும். இந்த கும்பல்கள் அதிக பணம் கொடுத்துவிட்டு வட்டிக்காக குடும்பத்திலுள்ள பெண்களை இழிவாகவும்,கடத்திச்சென்று விடுவதாகவும் பேசுகின்றனர்.

சொல்லாத கருணாஸ்
மாநில அரசு கந்துவட்டி கும்பல்களை கைது செய்து அதிகப்படியான தண்டனைகளை வழங்கவேண்டியது கட்டாயம் என்றார். ஆனால் தப்பித்தவறி கூட அன்புசெழியன் பெயரை கருணாஸ் உச்சரிக்கவில்லை.

கருத்து சொல்ல மறுத்த கருணாஸ்
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் -ஈபிஎஸ் அணிக்கு கிடைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தினகரன் ஆதரவாளரும்,இரட்டை இலைசின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான கருணாஸ் இந்த கேள்விக்கு இப்பொழுது கருத்து சொல்ல விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications