ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் அதிமுகவில் சலசப்பு வெடித்தது. இதையடுத்து அவரே முதல்வராகவும் பதவி ஏற்பேன் என துடித்து வருகிறார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களையும் மிரட்டி ரிசாரட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா, கங்கை அமரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது லாரன்ஸ் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+