நடிகர் என்ற கவுரவம் பாராமல்.. துடைப்பம் எடுத்து மெரினாவை சுத்தப்படுத்திய மன்சூர் அலிகான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் அமரும் இடத்தை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பல விஐபிகளும் பங்கேற்று ஆதரவு அளித்து வருகிறார்கள். அதே போல மன்சூர் அலிகானும் அங்கு சென்று ஊக்கம் கொடுத்தார்.

இதன் பிறகு துடைப்பம் ஒன்றை எடுத்து பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார். முதலில் இதை யாரும் கவனிக்கவில்லை. சில நிமிடம் கழித்து சிலர் இதை பார்த்து துடைப்பத்தை வாங்க முயன்றனர். அனால் வலுக்கட்டாயமாக அதை மறுத்த மன்சூர் அலிகான் தனது வேலையை தொடர்ந்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
மெரீனாவில் வில்லன் நடிகர் கூச்சப்படாமல் செய்த காரியம்! வீடியோ pic.twitter.com/O7hk7c9sJw
— குன்னத்தூர்ஆறுமுகம்⭐ (@kunnathurarumug) January 21, 2017


Click it and Unblock the Notifications
