பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்- தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. கலை பிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications