CWC-யில் நாகேஷ் பேரன்! கட்டி அணைத்து கலங்கிய புகழ்.. இருவருக்கும் இப்படியொரு உறவா? நெகிழ்ந்த அரங்கம்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாகேஷ் பேரன் கஜேஷ் என்ட்ரி கொடுத்ததுமே அவரை பார்த்து புகழ் கண்கலங்கினார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சி 10 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ராஜ் ஐயப்பன், விஜே விஷால், இயக்குநர் கிஷோர், மதுரை காளையன், சிவாங்கி, ஆன்ட்ரியன், விசித்திரா, ஸ்ருஷ்டி டாங்கே, மைம் கோபி ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் கடந்த 3 சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த முறை குக்காக அறிமுகமாகியுளளார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பன், விஷால் ஆகிய 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஷெரின் வெளியேற்றப்பட்டார்.
இதனால் ஷெரின் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். ஷெரீனை கிண்டல் செய்து புகழ் இந்த நிகழ்ச்சியை ஒப்பேற்றி வந்தார், அது போல் ஸ்ருஷ்டியையும் அவர் கிண்டல் செய்து வந்தார். தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் வெளியேறி வந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியில் இரு போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கலை இயக்குநர் கிரண், மற்றொருவர் நாகேஷ் பேரன் கஜேஷ் ஆவார். இவர் நடிகர்ஆனந்த்பாபுவின் மகனாவார். இவர் நிகழ்ச்சிக்கு என்ட்ரியானதும் புகழ் ஓடி சென்று கட்டி அணைத்துக் கொண்டார். ஏன் கஜேஷுடன் இத்தனை நெருக்கம் காண்பிக்கிறார் புகழ் என தெரியாமல் போட்டியாளர்களும், கோமாளிகளும் நடுவர்கள் விழித்தனர்.
அதன் பிறகு கண் கலங்கியவாறே இருந்த புகழை கஜேஷ் ஆசுவாசப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகையில் சினிமாவிற்கு நான் வருவதற்கு முன்பு வரை பல மாதங்களுக்கு கஜேஷ் தான் தனக்கு சாப்பாடு, உடுத்த உடை உள்ளிட்டவைகளுக்கான செலவை பார்த்துக் கொண்டார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு முக்கிய காரணங்களில் கஜேஷும் ஒருவர் என கலங்கியபடியே புகழ் கூறினார்.
இதையடுத்து கஜேஷின் நட்பை எண்ணி அங்கிருந்தவர்கள் கைதட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். புகழ் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் களம் காண்பதற்காக சென்ற போது அவரை யாருமே உள்ளே அனுப்பவில்லை என பல பேட்டிகளில் கூறியுள்ளார். அவரை ஊக்கப்படுத்துவதை விட நிறைய பேர் அவதூறாக பேசியுள்ளனர் என கண் கலங்கி பல இடங்களில் கூறியுள்ளார்.

பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பெண் வேடங்களில் புகழ் நடித்திருப்பார். பின்னர் குக் வித் கோமாளி, காமெடி ராஜா கலக்கல் ராணி, மிஸ்டர் அனட் மிஸ்ஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் சிவாங்கியுடன் இணைந்து செய்த காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இவருக்கு 2019 ஆம் ஆண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தானம் நடித்த சபாபதி படத்தில் நடித்திருந்தார்.
அது போல் நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் சிறிய காமெடி ரோலில் நடித்திருந்தார். பின்னர் எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கடை, அயோத்தி, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு காசேதான் கடவுளடா படமும் ரிலீஸானது. அது போல் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications