ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை நாளை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்! பெரும் பரபரப்பில் தமிழகம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கிறார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த். இவருக்கு வயது வித்தியாசமின்றி பட்டிதொட்டியெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள்.
திரைப்படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த்.

அரசியல் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரையில் அந்த விஷயத்தில் பிடிகொடுக்கவேயில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அறிவிப்பு
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் திட்டத்தை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

நாளை அறிவிப்பு
நாளை காலை 8.30 மணியளவில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நண்பகல் நேரத்தில், அவர் ரசிகர்களுடனான சந்திப்பை நிறைவு செய்துவிட்டு, ரசிகர்கள் முன்னிலையிலேயே தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளார்.

அரசியல் வடிவம்
ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்படியான வடிவுடையதாக இருக்கும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாளைதான் அது வெளியாகும். இந்த தகவல்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஊடகங்களும் நாளைய ரஜினி அறிவிப்பு செய்தியை உடனுக்குடன் வழங்க ஆயத்தமாகி வருகின்றன. ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த அறிவிப்பு நாளை வெளியாவதால் தமிழகம் முழுக்க ரஜினி ரசிகர்கள் நடுவே இதுவே இப்போது பேசுபொருளாகியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications