மதம் மாறிய ராமராஜன்? ஆண்டனி பிச்சையாக பெயர் மாற்றம்?!

Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகர் ராமராஜன் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், அவரது பெயரை ஆண்டனி பிச்சை என்று மாற்றிக் கொண்டார் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கோவையில் நடைபெற்ற கிருஸ்துவப் பெருவிழா கூட்டம் ஒன்றில் ராமராஜன் சிறப்பு சாட்சியாக முன்னிறுத்தப்பட்டதுதான் பரபரப்புக்குக் காரணம்.

மதுரையில் உள்ள தேவாலயம் ஒன்றில் ராமராஜன் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டு தனது பெயரை ஆண்டனி பிச்சை என்று மாற்றிக் கொண்டதாக கூறும் சிலர், அதிமுக தலைமைக்கு மதம் மாறிய விவகாரம் பிடிக்காது என்பதால் அடக்கி வாசிப்பதாக கூறுகின்றனர்.

நானா? மதம் மாறினேனா?

நானா? மதம் மாறினேனா?

மதம் மாற்றமும், பெயர் மாற்றமும் உண்மையில்லை என்று பதறிப் போய் கூறுகிறார் நடிகர் ராமராஜன். இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்கிறார்.

அன்புக்கு மரியாதை

அன்புக்கு மரியாதை

விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிய நேரத்தில் கிருஸ்துவ நண்பர்கள் எனக்காக ஜெபம் செய்தனர். அந்த அன்புக்கான மரியாதையாகத்தான் கிருஸ்துவ விழாவில் கலந்து கொண்டேன்.

எல்லோரையும் பிடிக்கும்

எல்லோரையும் பிடிக்கும்

எனக்கு பிள்ளையார், ஏசப்பா, அல்லா எல்லோரையும் பிடிக்கும். அதனாலதான் அடிக்கடி சர்ச்சுக்குப் போவேன். இதைத்தான் மதம் மாறியதாக பரப்பிவிடுறாங்க.

பிரச்சாரத்துக்கு ரெடி

பிரச்சாரத்துக்கு ரெடி

நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு நான் எப்பவோ ரெடி. அம்மாவின் உத்தரவு கிடைச்சதும், 40 தொகுதிகளுக்கும் சூறாவளிப் பயணம் கிளம்புவேன்.

தெய்வத் திருமுகம்

தெய்வத் திருமுகம்

அம்மதான் எல்லாமே! அந்த தெய்வ திருமுகத்துக்கு நாடு முழுவமும் ஆதரவு அதிகமாக இருக்கு. அம்மா பிரதமர் ஆவதுதான் எங்க எல்லோரின் ஒரே குறிக்கோள் மத்தபடி நான் மதம் மாறியதாக கூறுவதோ, பெயர் மாறியதாக கூறுவதோ சுத்தப் பொய் என்கிறார் ராமராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+