சின்னம்மா தான் அதிமுக தலைவியாக வேண்டும்: சொல்வது ராமராஜன்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து அதிமுக தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக எம்.பி.யான நடிகர் ராமராஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகர், ஆதரவாளர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அம்மா புகழ்பாடுபவர்.

தேர்தல் நேரங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருபவர். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு கட்சியின் மூத்த தலைவர்கள் சசிகலாவை வலியுறுத்தி வருகிறார்கள்.
சசிகலாவுக்கு அதிமுகவின் 49 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சசிகலா கட்சி தலைவியாக பொறுப்பேற்க ராமராஜனும் ஆதரவு தெரிவித்துள்ளார். ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தபோது அவரின் மருத்துவ செலவை ஏற்றவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications