நகை பறிப்பு: நடிகை திரிஷாவின் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த, நடிகை த்ரிஷாவின் கார் ஓட்டுனர் உள்ளிட்ட 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம் பகுதிகளில், தொடர்ந்து, நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்ய, போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சந்தேஷபுரம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும், அங்கிருந்து தப்பினார்.
சந்தேகமடைந்த போலீசார், அவரின் பைக் எண்ணை பதிவு செய்து விசாரித்ததில், அவர், சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்த குமார், 29, என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடிகை த்ரிஷாவிடம், கார் ஓட்டுனராக பணிபுரிந்ததும் தெரிந்தது.
அவர், பணி முடிந்தவுடன், சேலையூர், பாரத் நகரை சேர்ந்த விக்னேஷ், 20, ஏ.பி.என்.நகரை சேர்ந்த விவேக், 20, ஆகியோருடன் சேர்ந்து, நகைபறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுவரை, 10 க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், 30 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications