நேரம் தேதி குறித்தால், பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயார்.. எச் ராஜாவுக்கு சத்யராஜ் பதிலடி
நேரம் தேதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயார் என எச் ராஜாவுக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நேரம் தேதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயார் என எச் ராஜாவுக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் சிலைகளை அகற்றியது. இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எச் ராஜா இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறியிருந்தார். இதனைக் கண்டித்து எச் ராஜாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்நிலையில் எச் ராஜாவின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, திரிபுராவில், தோழர், புரட்சியாளர் லெனின் சிலை உடைப்புக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டிலும் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் ஒரு சித்தாந்தம்
பெரியார் என்பது ஒரு சிலையல்ல, ஒரு பெயர் அல்ல, ஒரு உருவமல்ல, ரத்தமும், சதையும், எழும்பும் சார்ந்த ஒரு மனிதப் பிறவி மட்டும் அல்ல, பெரியார் என்பது ஒரு தத்துவம். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுதலைக்காக, மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்.

எந்த சக்தியாலும் முடியாது
அவர் சிலையாக மட்டும் வாழவில்லை. எங்களைப் போன்றவர்களின் உள்ளத்திலும் வாழ்ந்து வருகிறார். எந்த பதவியை வைத்தும், சக்தியை வைத்தும், எந்த இராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் தொண்டர்கள் தயார்
நேரம், தேதி குறித்தால், பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எச்.ராஜா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications