25 ஆண்டுகளாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்- நடிகர் சத்யராஜ்
சென்னை: மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னையில் பேரணியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். மகனின் விடுதலைக்காக 25 ஆண்டுகாலமாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி தொடங்கியது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு தரப்பினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து நடைபெற்ற பேரணியில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஜனநாதன், விக்ரமன், கௌதமன், மதிமுகவின் மல்லை சத்யா, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கத்தலைவர் நாசர், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பண்ருட்டி தி. வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்ட பல இயக்கங்களின் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேரணியில் பங்கேறுள்ள அனைவரும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
25 ஆண்டுகாலமாக மகனின் விடுதலைக்காக கண்ணீருடன் போராடி வரும் அற்புதம் அம்மாளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இந்த 7 தமிழர்களின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சத்யராஜை போல, நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் சிறையில் தவிக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications