ஊழல் பத்திப் பேசும் பிரேமலதா... வெங்கடேஸ்வரா காலேஜோட ஐடி கணக்கை தர முடியுமா?- செந்தில் 'பொளேர்'
சென்னை: லஞ்சம், ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தன்னுடைய வெங்கடேஸ்வரா காலேஜூக்கான வருமான வரி கணக்கை ஒழுங்காக கட்டுகிறாரா? அதை வெளியிட முடியுமா? என்று அதிமுக பேச்சாளரும் நகைச்சுவை நடிகருமான செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் செந்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சத்யராஜ்தான் ஒரு படத்துல என்னங்கடா கறுப்பு எம்.ஜி.ஆர்., செவப்பு எம்.ஜி.ஆர்., மஞ்சள் எம்.ஜி.ஆர்-னு சொல்றீங்க? எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்-தான்டா' என்று டயலாக் பேசுவார்.
எனக்குப் பழைய விஜயகாந்த்தை நல்லாவே தெரியும். இவரு, அவரு இல்லை. மேடையில விஜயகாந்த் பேசணும்னு சொன்னதும் எந்திரிக்கிறார்... உடனே பிரேமலதாவும், மச்சானும் பின்னாடி இருந்து கையப்பிடிச்சு இழுக்குறாங்க. ஏதோ அவர் ரோபோ பொம்மை மாதிரி இருக்கார்.

இவங்க ரிமோட் வெச்சு அவரை இயக்குறாங்க. தே.மு.தி.க விஜயகாந்த்தோட கட்சி இல்லை. பிரேமலதா, சுதீஷ் குடும்பத்தோட கட்சி. அம்மா வேட்பாளர்கள் பட்டியலை முன்னாடியே அறிவிக்கலைனு பிரேமலதா கேட்குறாங்க. எப்போ அறிவிக்கணும்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்.
ஜனங்ககிட்டே உங்களோட பாச்சா பலிக்காது. பிரேமலதாவுக்கு நேரு, அண்ணா, எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி யாரைப் பத்தியாவது தெரியுமா? நேர்ல பார்த்து இருக்காங்களா? மேடையில ஆ... ஊன்னு ஆக்ரோஷமா கத்துறாங்க. நீங்க நேத்து ஆரம்பிச்ச கட்சி. ஏற்கெனவெ ரெண்டு காலேஜ் நடத்துறீங்க. ஊழல் ஊழல்ன்னு சொல்றீங்களே. வெங்கடேஸ்வரா காலேஜ் கட்டினீங்க. அதுக்காக இன்கம்டாக்ஸ் சரியா கட்டுனீங்களா? கணக்குக் காட்டுங்க. ஆந்திரா பக்கம் ரெண்டு காலேஜ் கட்டிகிட்டு அப்படியே உங்க ஊர்ப்பக்கம் போயிடலாம்னு பாக்குறீங்களா? நான் பிரேமலதாவைப் பார்த்துக் கேட்குறேன்... ‘விஜயகாந்த்தை வெச்சுப் படம் எடுத்து, நான் நல்லா வாழ்ந்தேன்'னு ஒரே ஒரு தயாரிப்பாளரைக் காட்டுங்கப் பார்ப்போம். ஜனங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்களா?
இவ்வாறு நகைச்சுவை நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications