ஜெ. சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார்: நடிகர் வடிவேலு உருக்கம்
ஜெயலலிதா சாகவில்லை; உயிரோடுதான் இருக்கிறார் என்று நகைச் சுவை நடிகர் வடிவேலு உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று மிக உருக்கமாக தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார் நகைச் சுவை நடிகர் வடிவேலு.
இதுகுறித்து நடிகர் வடிவேலுவின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதாவின் மறைவு மிக துயரமாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய தீவிர ரசிகர் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் என் காமிடியை நிறைய ரசிப்பார் என்றும் கேள்வி பட்டிருக்கேன். மிகத் துணிச்சலானவர் அவர். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் படுவதை சொல்லக் கூடியவர். என்னைப் பொருத்தவரை அவர்கள் காலமாகவில்லை.

அவரின் பெயரை சொல்லி நிறைய பேர் என்னென்னவோ செய்தார்கள். நான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். என்னை யாருமே உள்ளே விடவில்லை. ஆனால், அவர்களால்தான் எனக்கு தொழில் போனது, பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன். முதல்வரைச் சுற்றி உள்ளவர்கள்தான் என்னை நடிக்க விடவில்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். அவரின் பெயரை சொல்லி யார் யாரோ என்னென்னவோ செய்துவிட்டார்கள். அது குறித்து பேசும் நேரம் இதுவல்ல.
முதல்வர் மிக மிக நல்லவர். சிறந்த நகைச்சுவை எண்ணம் கொண்டவர்கள். என் காமிடிக்கு அவர்கள் அடிமை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நல்ல மனது கொண்டவர். எல்லோரையும் நன்றாக பார்த்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
அவர் சாகவில்லை.. சாகவில்லை.. சாகவில்லை... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இயற்கையானவர். அந்த தாய் இறந்தது எனக்கு துயரமாக இருக்கிறது. அவர்களின் ஆன்மா இறைவனின் காலடியில் சேர வேண்டும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications