விஜய்- சீமான் ரகசிய சந்திப்பு! 2026க்கு ப்ளான் ரெடி? சீக்ரெட் நம்பர் 117.. உதயநிதிக்கு ஸ்கெட்ச்!
அரசியல் வட்டாரத்தில் நடிகர் விஜய்யும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ரகசியமாக சந்தித்துப் பேசிய விசயம் தான் ஹைலைட் ஆக இருக்கிறது.
அதுவும் முதல்முறை சந்திப்பு இல்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இருவரும் நீலாங்கரையில் ரகசியமாகச் சந்தித்துப் பேசிய விசயம் இப்போது வெளியே வந்துள்ளது.

அது மட்டும் இல்லை. சில நாள்கள் முன்னதாக இந்த இருவரும் இரண்டாவது முறையாகச் சந்தித்து அரசியல் பேசி உள்ளனர். இந்த 2வது சந்திப்பு வெளியே கசிந்தபோதுதான் தேர்தலுக்கு முன்பாக நடந்த சந்திப்பு பற்றிய தகவல் வெளியே வந்துள்ளது.
இந்தத் தகவலை சினிமா வட்டாரத்தில் அதிக புழக்கம் உள்ள வாராகி வெளிப்படுத்தி உள்ளார்.
மேற்கொண்டு பல திட்டங்களை இந்தச் சந்திப்பின் போது இருவரும் தீட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு எப்போதுமே நடிகர் விஜய் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதாவது சினிமா நடிகர்களே நாட்டை இனி ஆளக்கூடாது என முஷ்டியை முறுக்கும் சீமான், விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என்றதும் பொட்டிப் பாம்பாகச் சுருண்டு படுத்துக் கொண்டார்.
அதற்குக் காரணம், அவர் முன்பு விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவதாகத் திட்டம் இருந்தது. அதற்காகக் கதை டிஸ்கசனில் ஒரு பெரிய பட்டாளமே ஈடுபட்டு வந்தது.
அதாவது நடிகர் சங்கம் பக்கம் உள்ள ஒரு ஹோட்டலில் சீமானுக்கு என்றே தனி ரூம் போட்டுக் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் தாணு. அங்கேதான் தினம் டிஸ்கசன்.
தினமும் மதியம் 20 பேருக்குச் சாப்பாடுக் கட்டிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சீமான் டீம் செய்யும் டிஸ்கசன்களை எல்லாம் பார்த்து ரசித்துவிட்டுப் போவதைப் பலவருடங்களாக ரசித்துச் செய்து வந்தார் தாணு.
அந்தப் படத்திற்கு 'பகலவன்' என்று கூட டைட்டில் வைக்கப்பட்டது. எப்படியாவது விஜய்யிடம் கால்ஷீட் வாங்கிவிட வேண்டும். படத்தை இயக்கிவிட வேண்டும் என்பதற்காகச் சீமான் போராடினார்.

விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது கூடவே அது சர்ச்சைகளையும் இழுத்துக் கொண்டு வரும். சர்க்காரில் பிரச்சினை. தெறிக்குப் பிரச்சனை, கத்திக்குப் பிச்சனை. அதற்கு முன் தலைவா பிரச்சனை. இப்படி எந்தப் படமாக இருந்தாலும் அதற்குக் கூடவே பிரச்சினை மணியும் அடித்து கொண்டேதான் வரும்.
அப்படிப் பிரச்சினை வந்த போது எல்லாம் முதல் ஆளாக குரல் கொடுத்தவர் சீமான்.அதற்குக் காரணம் கால்ஷீட். 'பகலவன்' எப்படியாவது படமாகிவிடுவான் என்று நம்பிக்கையிலிருந்தார். அதற்காகக் கத்திக் கத்தி விஜய்யை ஆதரித்து பேட்டிகள் கொடுத்தார்.
இறுதியாக 'ஒரு தமிழன் இந்த நாட்டை ஆளட்டுமே' என்று விஜய்க்காகத் தனது முதல்வர் நாற்காலி கனவைக் கூட விட்டுக் கொடுத்தார்.
ஆனால், விஜய் கடைசிவரை காது கொடுத்து சீமான் கதையைக் கேட்கவே இல்லை. கால்ஷீட்டுக் கொடுக்கவே இல்லை.
தன்னை ஆதரித்ததற்காக அவ்வப்போது நன்றி சொல்லி போன் செய்ததோடு சரி. இப்போது தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பிறகு அவர் சீமானுடன் அடிக்கடி பேசுவதாகச் சொல்லப்படுகிறது.
அதனடிப்படையில் சீமான் பிறந்த நாளுக்கு வெளிப்படையாகவே வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனம் மாறி இருக்கிறார் விஜய்.
இந்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சந்தித்துப் பேசி உள்ளனர். அதனை அடுத்துக் கடந்த சில நாள்கள் முன்னதாக இந்த இருவரும் மீண்டும் சந்தித்திருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பற்றிய விசயங்களை விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது. அதையும் வாராகிதான் வெளிப்படுத்தி உள்ளார்.
அதாவது மொத்தம் 234 தொகுதிகளை ஆளுக்குப் பாதி பாதியாகப் பிரித்துக் கொள்வதாகத் திட்டம். அதாவது ஆளுக்குச் சராசரியாக 117 தொகுதிகள். யார் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுகிறார்களோ அவர் தான் முதல்வர். குறைவாக எடுப்பவர் துணை முதல்வர்.
இந்தத் தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால், இதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே அரசியல் வியூகர்கள் சொல்கிறார்கள்.

அதிமுக, திமுக இரண்டையும் விஜய் ஏற்கவில்லை. குறிப்பாக அவர் உதயநிதியின் வளர்ச்சியை ஏற்கவே இல்லை. அப்படிப் பார்த்தால் 2026 களத்தில் திமுக உதயநிதியை மையப்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது.
அதை உடைப்பதுதான் விஜய் திட்டம். அதை உடைப்பதுதான் சீமான் திட்டம். இந்தத் திட்டத்தில் அண்ணாமலையும் கைகோர்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதற்காகத்தான் ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், என்ன செய்வது என்றுதான் இந்த மக்களவைத் தேர்தலைத் தியாகம் செய்துள்ளார் விஜய். ஆக, அவருக்குப் பாஜகவுடன் பகை இல்லை.
இதே திமுக அதிமுக எதிர்ப்பில் பாமகவும் உள்ளது. விஜயகாந்த் அரசியல் எண்ட்ரியை கடுமையாக எதிர்த்த பாமக, விஜய் கட்சி தொடங்கிய போது சாஃப்ட் ஆக டீல் செய்தது.
'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்' என்று மனம் மாறி பேசினார் அன்புமணி. அப்படி இந்தக் கட்சிகள் இணைந்தால் அந்த 117 என்ற கணக்கு கொஞ்சம் மாறலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications