இளையதளபதி டூ தளபதி...விஜய் அடைமொழி மாற்றத்தின் காரணம் என்ன? #HBDMERSALVIJAY #HBDThalapathy
இளையதளபதியாக இருந்த விஜய் தனது 61வது படத்தின் மூலம் தளபதி விஜய் ஆக மாறியுள்ளார்.
சென்னை : இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்த இளையதளபதி விஜய் தனது 61வது படத்தின் மூலம் தளபதி விஜய்ஆக மாறியுள்ளது சமூகவலைதளங்களில் பெரிதும் ட்ரெண்ட்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், தல, புரட்சித் தளபதி என பல முன்னணி நடிகர்கள் தங்களது பெயருக்கு முன் அடைமொழி வைத்துக் கொண்டுள்ளனர்.
திரையரங்குகளில் நடிகர்களின் பெயர் வருவதற்கு முன்னர் வரும் அடைமொழிக்கே விசில் பறக்கும். இதே போன்று சினிமாவை பொறுத்தவரை விஜய் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிறார்.
இளைஞர்கள் மத்தியிலும், குழந்தைகளிடையேயும் அவருக்கு தனி வரவேற்பு உண்டு. விஜயின் தங்கச்சி சென்டிமென்ட் அதாவது சிறு வயதிலேயே அவரது சகோதரி இறந்துவிட்டார் என்ற நெகிழ்ந்த விஜய்யை அண்ணா, அண்ணா என்று பெண்கள் உறவுமுறையுடன் அழைக்கத் தொடங்கினர்.

யூத்களின் ரோல் மாடல்
படப்பிடிப்புகளிலும், நிஜத்திலும் மிகவும் ஜாலியான மனிதர் என்று படப்பிடிப்பு குழுவிடம் பெயர் சம்பாதித்தவர். இளைஞர்களின் ரோல் மாடல் நடிகனாக மாறியதும் போக்கிரி திரைப்படத்தில் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று விஜய் கூறினார்.

தெறிக்கும் வசனங்கள்
இதனையடுத்து அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு சமூக நலன் விரும்பிகளின் கோரிக்கையை ஏற்று இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதில்லை எனவும் உறுதி எடுத்தார்.வாழ்க்கை என்பது வட்டம் போல எனவும், மேலிருப்பன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே போவான் என்ற அவர் பேசிய வசனங்கள் இப்போதைய நடைமுறையில் சாத்தியமே.

தளபதியாக மாறிய விஜய்
இதுவரை தனது படங்களில் இளையதளபதி பட்டத்தை உபயோகப்படுத்தி வந்த விஜய் அவரது 61வது படமான மெரசல் மூலம் தளபதி விஜய் என்ற அவதாரம் எடுத்துள்ளார். சமூக நலனில் அக்கறை செலுத்தி வரும் விஜய்க்கு ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா படத்திலேயே தலைவா, தலைவா உதிரம் எழுது தலைவா என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது.

ட்ரெண்ட்டான டைட்டில்
இந்த உத்வேகம் ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் வருகைக்கானது என்று சமிக்ஞை காட்டப்பட்டது. ஆனால் அமைதியாகவே இருந்த விஜய் தனது 61வது படத்தில் 'தளபதி'யாக மாறியுள்ளது அனைவராலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த தளபதி அடைமொழி சமூகவலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு ட்ரெண்ட்டாக மாறி வருகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications