500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு.. நடிகர் விஜய் "ஹேப்பி".... பொருளாதாரம் வளரும் என்கிறார்!
500,1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் 80 சதவிகித மக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை: பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் செல்லாது என்று தெரிந்த உடன் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் மனதை பாதித்தது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நாட்டிலேயே இதுவரைக்கும் யாரும் செய்ய நினைக்காத, செய்ய யோசிக்காத செயல் இது. இது போன்ற சட்டங்களை அமல்படுத்தும் போது நாட்டிற்கு நல்லது நடக்கும் போது சிலருக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்தை மாற்றவும், ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மக்கள் சில்லறைக்காக தவித்து வருகின்றனர். மோடியின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், ரஜினி, கமல் ஆகிய நடிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிரடியானதுதான். 20 சதவிகிதம் பேர் செய்யும் தவறினால் 80 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மருந்து வாங்க கூட பணமில்லாமல் சிலர் உயிரிழந்துள்ளனர். பேத்தி திருமணத்திற்காக வைத்திருந்த பணம் செல்லாது என்று தெரிந்த உடன் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை எல்லாம் கேள்வி பட்ட உடன் மனதுக்கு சங்கடமாக இருந்தது.
மத்திய அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்றும் நடிகர் விஜய் கூறினார். பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications