கோவையில் மோடியைச் சந்தித்தார் விஜய்... மரியாதை நிமித்தமாம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு 4வது முறையாக இன்று தமிழகம் வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் புதன்கிழமை இரவு 7 மணிக்கு சந்தித்தார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.

இதனிடையே இன்று 4வது முறையாக தமிழகம் வரும் மோடி கிருஷ்ணகிரி, சேலம் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கோவை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் கோவையிலேயே இரவு தங்குகிறார்.

இந்நிலையில் மோடியை கோவையில் வைத்து நடிகர் விஜய் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்தார். இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

மோடியைச் சந்தித்த சில நிமிடங்களுக்குள் அந்த சந்திப்புக்கான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றினர் விஜய் ரசிகர்கள்.

மரியாதை நிமித்தம்தான்..

மரியாதை நிமித்தம்தான்..

இந்த சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய விஜய், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் இல்லை என்றார்.

ஆனால் நாளை மோடியின் பிரசாரக் கூட்ட மேடையிலும் நடிகர் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி- விஜய்

மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி- விஜய்

இது தொடர்பாக நடிகர் விஜய்-ன் அதிகாரப்பூர்வ ரசிகர்களின் ட்விட்டர் பக்கத்தில் (@Vijay_cjv) "அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்- விஜய்" என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

முன்பு அதிமுக..

முன்பு அதிமுக..

கடந்த தேர்தலின் போது அதிமுகவின் வெற்றிக்காக அணில் போல உதவியதாக கூறியிருந்தார். ஆனால் பின்னர் தலைவா பட பிரச்சனையில் அதிமுக அரசுடனான உறவு முறிந்தது. இந்நிலையில் "அரசியலற்ற" வகையில் மோடியுடன் சந்திக்க இருப்பதாக விஜய் கூறியிருக்கிறார்.

அப்புறம் ராகுல்..

அப்புறம் ராகுல்..

கடந்த ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் நடிகர் விஜய் சந்தித்துப் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இடையில் அன்னா ஹசாரே...

இடையில் அன்னா ஹசாரே...

அதே போல சில மாதங்களுக்கு முன் லோக்பால் மசோதாவை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவை டெல்லியில் வைத்து, அவர் உண்ணாவிரதம் இருந்த மேடையிலேயே சந்தித்துவிட்டு வந்தார் விஜய். இந் நிலையில் இப்போது மோடியை இன்று இரவு சந்திக்கிறார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+