அதிமுக கொடியை பச்சை குத்திய விஜயகுமார் இப்போது பாஜகவில்... அரசியல் பயணம்
சென்னை: எம்.ஜி.ஆர் மீதுள்ள அபிமானத்தில் அதிமுகவில் இணைந்து அந்த கட்சியின் கொடியை கையில் பச்சை குத்திக்கொண்ட நடிகர் விஜயகுமார், நீண்ட கால அரசியல் வனவாசத்திற்குப் பின்னர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
1973ல் பொண்ணுக்கு தங்க மனசு' படத்தின் மூலம் அறிமுகமான விஜயகுமார், பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவ விஜயகுமார். எம்.ஜி.ஆர் மீது கொண்ட அபிமானத்தால் அதிமுகவில் இணைந்த விஜயகுமார், அக்கட்சியின் கொடியை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார்.
நடிகர் விஜயகுமார் அதிமுகவின் தீவிர அபிமானியாக இருந்தலும், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என 5 முதல்வர்களுடன் பழகியவர் என்று அடிக்கடி பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

நாடகத்தில் நடித்தபோது காமராஜருடன் சந்திப்பு ஏற்பட்டது. நாடக நடிகராக இருந்த விஜயகுமாரை சினிமாவில் நடிக்க சிபாரிசு செய்தவர் கருணாநிதி. இதை விஜயகுமாரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமா நடிகரான பின்னர் அண்ணாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆரை அண்ணன் என்று அழைக்கும் அளவிற்கு நட்பு பாராட்டியவர். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகி தனி கட்சி தொடங்கிய பின்னர் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மீதுள்ள அபிமானத்தால் கட்சியின் கொடியை கையில் பச்சை குத்தினார்.
1978ல் வெளியான, 'மாங்குடி மைனர்' படத்தில் கழுத்தில் எம்ஜிஆர் படம் பொறித்த டாலர், கையில் அதிமுக கொடியுடன் அறிஞர் அண்ணா சிலையைப் பார்த்து,
" அண்ணா - நீங்க நினைச்சபடி நடந்திருக்கு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு " - என்று பாடியவர் விஜயகுமார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த விஜயகுமார் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.
சினிமாவில், சீரியலில் நடித்து வந்த விஜயகுமார், நடிகத் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த விஜயகுமார் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கையில் குத்தியுள்ள
அதிமுக கட்சி கொடியை என்ன செய்வார்? ஒருவேளை தாமரையாக மாற்றிக்கொள்வாரோ?
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications