நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம்... கண்டெடுத்து கொடுத்த கால்டாக்ஸி டிரைவர்
சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் காணமால்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான மோதிரத்தை, கால்டாக்சி டிரைவர் ஒருவர் கண்டெடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது நேர்மையை அனைவரும் பாரட்டினர்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் ரஞ்சித், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனாவார்.

முன்னதாக ரஞ்சித் மற்றும் அக்ஷிதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் அணிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2-ந் தேதி, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரிம் பார்லருக்கு அக்ஷிதா சென்றிருந்தார். அப்போது அவரது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்துவிட்டது. இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் லட்சுமணன் (36) என்பவர் அந்த மோதிரத்தை கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்துள்ளார். கால் டாக்சி டிரைவரான லட்சுமணன், செங்குன்றம் எடப்பாளையத்தவர். அவருக்கு தனது மனைவி பார்வதி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லட்சுமணனின் நேர்மையான குணத்தை அனைவரும் பாராட்டினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications