For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமலின் "விசில் ஆப்".. வி்ஷால் கேட்கும் விசில் சின்னம்... கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு வேட்புமனுவில் கோரியுள்ளதை பார்க்கும்போது இவர் கமல்ஹாசனின் வேட்பாளர் என்றே தோன்றுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்கே நகரில் விஷால் என்ன சின்னம் கேட்டிருக்கார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நடிகர் விஷால் தனக்கு விசில் சின்னம் வேண்டும் என கோரியுள்ளதை பார்க்கும் போது கமல்ஹாசனின் விசில் ஆப் நினைவுதான் வருகிறது. எனவே கூட்டி கழிச்சி பார்த்தால் விஷாலின் பின்புலம் யார் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

    கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் அரசியல் குறித்து பேசி வருகிறார். தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அவர், விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

    கமலின் பிறந்தநாளன்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்காக மையம் விசில் என்ற ஆப்யையும் (செயலி) அவர் உருவாக்கினார். இதனிடையே ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு கமல் எந்த பதிலையும் தரவில்லை.

    நட்புணர்வு

    நட்புணர்வு

    இதனிடையே கமலும் விஷாலும் நட்புடன் இருப்பதால் தேர்தலில் ஆழம் பார்க்க விஷாலை தனது கட்சி வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தினால் நடிகர் விஷால் தான் தனித்து போட்டியிடுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

    கமல் ஆதரவு உண்டு

    கமல் ஆதரவு உண்டு

    தயாரிப்பாளரின் புகாரின் பேரில் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை நடித்து முடிக்க வேண்டும் என்று விஷால்க கமலிடம் கறாராக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலால்தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் திடீரென அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் அரசியல் ஸ்டென்ட் என்றும் இன்னும் சில நாள்களில் விஷாலை கமல் முன்னிலைப்படுத்தி ஆதரவும் தருவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    பின்னால் யாரும் இல்லை-விஷால்

    பின்னால் யாரும் இல்லை-விஷால்

    இன்று தண்டையார்பேட்டையில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்னர் அவர் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கும், ஜெயலலிதா சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது விஷால் கூறுகையில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவு எனது தனிப்பட்ட விருப்பம். எனக்கு பின்னால் யாரும் இல்லை என்றார்.பின்னர் வேட்புமனுதாக்கல் செய்ய வந்தபோது அவருக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    விஷாலின் பின்புலம் தெரியும்

    விஷாலின் பின்புலம் தெரியும்

    முன்பு கமல், கெஜ்ரிவாலைப் போய்ப் பார்த்தார். அவர் கமலை இங்கு வந்து சந்தித்தார். இப்போது விஷாலுக்கும் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையெல்லாம் வைத்து கணக்கு போட்டு பார்த்தால் விஷாலின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும். ஒரு வேளை நிர்வாக ரீதியிலான பொறுப்பில் தான் வந்து தவறு செய்தாலும் இந்த விசிலை தனக்கு பொதுமக்கள் அடிக்கலாம் என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.

    இப்ப இந்த விசில் யாருடையது என்பது சுவாரஸ்யமான கேள்வியாக மாறியுள்ளது.

    English summary
    Actor Vishal contest in RK Nagar byelection. Sources says that Actor Kamalhassan is behind Vishal's contesting decision. Vishal wants Whistle symbol for election. It is better to remainder that Actor Kamalhassan starts maiamwhistle last month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X