நடிகர் சங்க கட்டடம் கட்ட ஹைகோர்ட் இடைக்கால தடை... அப்போ விஷால் கல்யாணம்?
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்போ விஷால் திருமணம் எங்கே எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் கூறியுள்ளர் இப்போது கட்டடம் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளதால் விஷாலின் திருமணம் எங்கே? எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தியாகராய நகர் அருகே நடிகர் சங்கம் சார்பில் அந்த சங்கத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.26 கோடி செலவில் நான்கு மாடிகளுடன் நடிகர் சங்க கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தியேட்டர், ஜிம், கூத்துப்பட்டறை போன்றவை அமைக்கப்பட உள்ளது. அதற்கு ஏராளமான நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தியாகராய நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொது சாலையை நடிகர் சங்கத்தினர் ஆக்ரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த 33 அடி பொது சாலை நடிகர் சங்கத்திற்கு பட்டா பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கட்டடம் கட்ட தடை விதிக்க வேண்டுமென ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் பொதுச் சாலையில் 40 அடியை நடிகர் சங்க கட்டடம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதன் மதிப்பு 8 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட நடிகர் சங்கத்துக்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் நடிகர் சங்க கட்டடம் கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூமி பூஜை விழா
நடிகர் சங்க கட்டடத்துக்கான பூமி பூஜை விழா, சங்க வளாகத்தில் மார்ச் 31ஆம் தேதி நடந்தது. விழாவில் பத்திரிகையாளரிடம் பேசிய நடிகர் விஜய்குமார், 'நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் கூறியுள்ளர். இப்போது பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு கட்டடம் முழுமையாகக் கட்டப்பட்டு விடும். அநேகமாக நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் முதல் திருமணம், விஷாலுடையதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

கல்யாணம் எங்கே எப்போ நடக்கும்
சங்க செயலாளர் விஷால் தனது திருமணத்தை நடிகர் சங்க கட்டடத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார். இப்போது வழக்கு போடப்பட்டு கட்டடம் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியே இழுத்துக்கொண்டு போனால் கட்டடம் எப்ப கட்டி முடிக்கிறது? கல்யாணம் எப்போ நடக்கிறது? சும்மாவா சொன்னாங்க வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பாருன்னு!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications