ஆர்கே நகர் தேர்தலில் நின்ற நானும் அரசியல்வாதிதான்... விஷால் சீரியஸ் பேட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதே போன்று நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழவூரில் தனது ரசிகரின் இல்ல நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்பதற்காகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகவும், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தனது ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்றும் விஷால் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட விஷால் வேட்பு மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்படும் வரை சினிமாவை மிஞ்சும் வகையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. விஷாலின் மனு ஏற்பு, நிராகரிப்பு விளையாட்டில் கடைசியில் விஷாலுக்கு டாட்டா காட்டப்பட்டது. ஆனால் சுயேச்சை வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொன்னவர் அதன் பிறகு ஆர்கே நகர் பக்கமே வரவில்லை. இந்நிலையில் தான் இப்படி ஒரு கருத்தை விஷால் கூறி இருக்கிறார்.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!











Click it and Unblock the Notifications