சிவாஜி மணிமண்டப திறப்புவிழாவில் கூட்டமிருந்ததால் கலந்துக்க முடியல... விவேக் வேதனை!
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அதிக கூட்டம் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை என நடிகர் விவேக் வருத்தத்துடன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா அரங்குக்கு உள்ள செல்ல முடியாததால் திரும்பி வந்துவிட்டதாக நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடந்தது. மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமாரும் நடிகர்கள் கமல், ரஜினி, பிரபு உள்ளிட்டோரும் பேசினர். விழாவில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ராதிகா, சரத்குமார், சுகாசினி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் . பெரும் நெரிசல்.ஆர்வமுள்ள கலா ரசிகர்கள்.உள்ளேயே நுழைய இயலவில்லை.ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டேன்.நடிகர் திலகம் எபோதும் நம் இதயத்தில்
— Vivekh actor (@Actor_Vivek) October 1, 2017
இந்நிலையில், மணிமண்டப திறப்பு விழாவில் கூட்டமும் பெரும் நெரிசலும் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் நடிகர் திலகம் எப்போதும் நம் இதயத்தில் என நகைச்சுவை நடிகர் விவேக் தன் டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்












Click it and Unblock the Notifications