ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து
பகவானுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆஙகில ஆசிரியர் பகவானுக்கு அரசு பணியிட மாற்றம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த பணியிட மாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால், அவரது பண்பை நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்- இவ்வாறு விவேக் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications