சூர்யாவை கிண்டல் செய்தவர்களை டிஸ்மிஸ் செய்யுங்க... சன் டிவிக்கு நடிகர் சங்கம் கடிதம்
நடிகர் சூர்யா குறித்து தரம் தாழ்ந்து கிண்டல் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
சென்னை: நடிகர் சூர்யாவை கிண்டல் செய்த மியூசிக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சன் தொலைகாட்சி உரிமையாளருக்கு நடிகர் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நடிகர்சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில்சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள்இருவர், அவரது உயரத்தை குறித்துபேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நேற்று சன் தொலைக்காட்சிஅலுவலகம் முன் கூடினர். தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் தரம் தாழ்ந்தவர்களை விமர்சனம் செய்து நாம் நமது தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்ததை அடுத்து ரசிகர்கள்கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் உயரம் பற்றி விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சன் தொலைகாட்சி நிறுவனத் தலைவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தனிப்பட்ட ஒருவரைப் பற்றி அநாகரிகமான விமர்சனங்களை வெளியிடுவது பொருத்தமானது இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற காட்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications