அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டான்ஸ் மாஸ்டர்.. ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுத்த போலீஸ்!
பாலியல் தொல்லை கொடுத்ததாக நடனப்பள்ளி ஆசிரியர் மீது நடிகை அமலாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக நடனப்பள்ளி ஆசிரியர் மீது நடிகை அமலாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை அமலா பால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்,

பாலியல் தொல்லை
நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

விவாகரத்தில் முடிந்த திருமணம்
இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர் படங்களில் பிஸியாக உள்ளார்.

தொழிலதிபர் கைது
நடிகை அமலா பாலின் பாலியல் புகாரை தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அழகேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு சர்ச்சை
அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications