பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் அந்த பெண் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அந்த வீட்டிற்கு யாரோ ஒரு பெண் வருவது போன்றும் நடனம் ஆடுவது போன்றும் காட்டப்படுகிறது. அந்த பெண் நடிகை அஞ்சலி என்று தெரியவந்துள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அந்த வீட்டிற்கு ஒரு பெண் வருவது போன்று காட்டப்பட்டது. அவர் வேறுமில்லை நடிகை அஞ்சலி என்பது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 100 நாள்கள் 15 போட்டியாளர்கள் ஒரு வீட்டில் தங்கி பிக்பாஸ் கொடுக்கும் சவாலான டாஸ்குகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு என்று கூறப்படுகிறது.
அதன் படி பொதுமக்கள் வாக்களிப்பில் சிலர் வெளியேற்றப்பட்டனர். எனினும் ஸ்ரீயும், ஓவியாவும் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.

டிஆர்பி குறைந்தது
இந்நிலையில் ஓவியாவின் தைரியத்தாலும், நேர்மையாலும், தனித்தன்மையாலும் அவருக்கென்று ரசிகர்கள் குவிந்து அது ஆர்மி தொடங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. ஓவியா வெளியேறியவுடன் டிஆர்பி படுத்துவிட்டால் மேலும் 4 புதிய போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர்.

நிறைவடையும் நிலையில்...
தற்போது அனைவரும் எலிமினேட் ஆகி 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். அவர்கள் சினேகன், கணேஷ், ஆரவ், ஹரீஷ், பிந்து மாதவி உள்ளிட்டோராவர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளார்.

நடிகை அஞ்சலி
இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவில் யாரோ ஒரு பெண் வீட்டுக்குள் வருவது போன்று நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவர் வேறு யாருமல்ல நடிகை அஞ்சலியாம். இதுகுறித்து அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன். எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி குறிப்பிட்டுள்ளார்.
|
ஷட்அப் பன்னுங்க பாடல்
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியா, ஜூலியுடனான சண்டையின்போது குறுக்கே வந்த காயத்ரியை நீங்க ஷட்அப் பன்னுங்க என்று கூறினார். அந்த வார்த்தையில் புதிய பாடல் தொடங்குவதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார். அதேபோல் எங்கு பார்த்தாலும் நீங்க ஷட் அப் பன்னுங்க என்பது பிரபலமாகியது. இந்நிலையில் அந்த பாடலை விளம்பரப்படுத்த நடிகை அஞ்சலி இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார். பின்னர் அவருடன் சேர்ந்து 5 போட்டியாளர்களும் அந்த பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications