காங்கிரஸை விட்டு விலகிவிட்டேனா... குஷ்புவின் அதிரடி பதில்
அரசியலை விட்டு விலகினாலும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியலை விட்டு விலகினாலும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகமாட்டேன் என நடிகை குஷ்பு அதிரடியாக கூறியுள்ளார்.
அண்மையில் டுவிட்டருக்கு குஷ்பு முழுக்கு போட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி வேறு கட்சிகளில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் டுவிட்டரில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு குஷ்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் காங்கிரஸில் இருந்து விலகப் போவதாக வந்துள்ள தகவலில் உண்மை இல்லை.
வேலை வெட்டி இல்லாதவர்கள் வேண்டுமென்றே கிளப்பிய வதந்தி. காங்கிரஸுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களின் பொய் பிரசாரம். காங்கிரஸில் இருந்து நான் விலகுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேறு எந்த கட்சிக்கும் தாவ மாட்டேன். முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த செய்தியை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக வருகிறது என்றார் குஷ்பு.












Click it and Unblock the Notifications