நடிகை 'நமீதாவை' தென் சென்னை வேட்பாளராக்க முயற்சித்த காங்கிரஸ்!!
சென்னை: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் ஒருவழியாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பாளரை அறிவித்துவிட்டது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நடிகை நமீதாவை வேட்பாளராக்கவும் காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை கடைசிநிமிடம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் சி.கே. பெருமாள், மயிலை பெரியசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகை நமீதா தாம் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு குஷ்புவிடம் ஆலோசனை கேட்டாராம்.

குஷ்புவிடம் யோசனை
குஷ்புவும் காங்கிரஸ் அல்லது பாஜகவில் சேருவார் என்று செய்திகள் அடிபட்ட நிலையில் டெல்லிக்கு போயிருந்தார். அப்போது நமீதா, குஷ்பூவை தொடர்புகொள்ள அவரோ, மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவை பிடித்தால் காங்கிரஸில் சேரலாம் என்று அட்வைஸ் செய்தாராம்.

நக்மா மூலம் காங். தொடர்பு
நக்மா மூலமாக சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் தொடர்பு நமீதாவுக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக டெல்லியில் நமீதா முகாமிட, பேசாமல் அவரையே தென் சென்னை தொகுதி வேட்பாளராக அறிவித்துவிடலாம் என்று யோசித்திருக்கிறது காங்கிரஸ்.

நமீதாவா? தொப்பி கார்த்திக்கா?
நமீதாவை வேட்பாளராக்குவது தொடர்பாக ஜி.கே.வாசனிடமும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தென்சென்னை தொகுதியில் தொப்பி கார்த்திக்கை நிறுத்தலாமா என்ற யோசனையும் டெல்லியில் நடந்துள்ளது.

நமீதாவா? தொப்பி கார்த்திக்கா?
நமீதாவை வேட்பாளராக்குவது தொடர்பாக ஜி.கே.வாசனிடமும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தென்சென்னை தொகுதியில் தொப்பி கார்த்திக்கை நிறுத்தலாமா என்ற யோசனையும் டெல்லியில் நடந்துள்ளது.

நமீதா ஓகேதான்..
ஆனால் தொப்பி கார்த்திக், தென் சென்னையை வேண்டாம் என்று சொன்னதால் நமீதாவை களமிறக்கிவிடலாம் என்று முடிவு செய்ததாம் காங்கிரஸ் மேலிடம்

கடும் எதிர்ப்பால் பின்வாங்கல்
இந்த செய்தி தெரிந்த தமிழ் அமைப்பினரும் சினிமா பிரபலங்கள் சிலரும், காங்கிரஸில் சேர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றனர்.

காங்கிரஸே பிடிக்காதே.. நமீதா
இதனால் நமீதா பின்வாங்கிவிடதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நமீதா தரப்பில் விசாரித்த போது, எனக்கு காங்கிரஸே பிடிக்காது.. அதெப்படி அந்த கட்சியில் சேருவேன் என ஒரே போடாக போட்டுவிட்டார். ஒருவழியாக காங்கிரஸ், தென் சென்னைக்கு வேட்பாளரை கண்டும் பிடித்துவிட்டது. நமீதாவும் நிம்மதியாக இருக்கிறாராம்
நூற்றாண்டு கடந்த காங்கிரஸுக்கு வந்த சோதனையப்பா!!
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications