உதவி இயக்குநர் காந்தியை திருமணம் செய்ய மறுத்தது ஏன்? நடிகை நிலானி பரபர தகவல்
உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகியதாகவும் சீரியல் நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அள
Recommended Video

சென்னை: உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகியதாகவும் சீரியல் நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் டிவி நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காந்தி லலித்குமார் உயிரிழந்தார். நட்பாக பழகியதை காந்தி லலித்குமார் தவறாக புரிந்துகொண்டு திருமணம் செய்ய வற்புறுத்துவதாக காதலி நிலானி கூறியதால் மனமுடைந்த காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமண நாள்
ஆனால் நிலானியை செப்டம்பர் 4ஆம் தேதி மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார் காந்தி. இதனை வீடியோவாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 4 தங்களின் திருமண நாள் என்றும் அறிவித்துள்ளனர்.

கமிஷனர் அலுவலகத்தில் மனு
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல அந்தரங்க புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.

குடிக்கு அடிமையானார்
அதில் காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் நிலானி. காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கி செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன் என நிலானி தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். போட்டோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications