உயிரை காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்: நடிகை சமந்தா
சென்னை: அழகு நடிகை சமந்தா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். நீங்கள் செய்யும் இந்த தானம் உங்கள் இறப்பிற்கு பிறகு மற்றொரு உயிரை காப்பாற்ற உதவும் என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.
பிரபலங்கள் உடல் உறுப்பு தானம் செய்வது விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றன. சினிமா நட்சத்திரங்களின் உடல் உறுப்புதானம் பற்றிய தகவல்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெறுவது வாடிக்கையான நிகழ்வுதான்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவரைத் தொடர்ந்து, திரிஷா, அசின் போன்றவர்கள் ஏற்கனவே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

சமந்தா தானம்
இதே வரிசையில் நடிகை சமந்தா உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். விஜயவாடாவில் நடந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார் சமந்தா. அப்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

நற்பணி செய்யும் நாயகி
சமந்தா பல்வேறு நற்பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இந்நிலையில்தான், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார். இன்று அதற்கான பத்திரத்தில் கையெழுத்து இடுவதுடன், தனது ரசிகர்களும் அவ்வாறு உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தானம் செய்யுங்கள்
தனது அறிவிப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, ‘அறக்கட்டளை மூலம் நல உதவிகள் செய்வதற்கு பணம் தேவை என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் உடல் உறுப்பு தானத்துக்கு பணம் தேவையில்லை. நீங்கள் செய்யும் இந்த தானம் உங்கள் இறப்பிற்கு பிறகு மற்றொரு உயிரை காப்பாற்ற உதவும். சமூக நலனுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நற்காரியம் செய்ய வேண்டியது அவசியம். இதுபோன்ற உடல் உறுப்பு தானத்தை எனது ரசிகர்களும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கமல் பிறந்தநாளில் தானம்
உடல் உறுப்புகள் மட்டுமின்றி தனது உடலையே மருத்துவக்கல்லூரிக்கு எழுதி வைத்தவர் கமல்ஹாசன். அவரது பிறந்தநாளான நாளை 7ம் தேதி சமந்தா தனது உடல் உறுப்புகளை தானமாக தரும் பத்திரத்தில் கையெழுத்திடுவது மிகப்பொருத்தமானது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications