சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா
Recommended Video

சென்னை: நடிகர் விஜயகுமார் சினிமாவில் வேறு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியுமானவர் என்று அவர் மகள் வனிதா குற்றம்சாட்டினார்.
நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது.
மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது.

விஜயகுமார் புகார்
சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு
போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பரபரப்பு பேட்டி
இதையடுத்து இரவே நிருபர்களுக்கு பேட்டியளித்த வனிதா, சீரியலிலும், சினிமாவிலும் நல்லவர் போல நடித்து பெயர் வாங்கும் விஜயகுமார், நிஜத்தில் அப்படி இல்லை. சினிமாவில் கூட வில்லத்தனம் செய்வோர், பிறருக்கு எதிராக செய்வார்கள். சொந்த மகளுக்கு எதிராக வில்லத்தனம் செய்ய மாட்டார்கள். ஆனநால், இங்கு எனது தந்தையும், சகோதரர் அருண் விஜயும் என்னை வெளியே விரட்டியடிக்கிறார்கள்.

அடித்து விரட்டியுள்ளார்கள்
நான் திக்கற்று போய் உள்ளேன். வாடகைக்கு வீடு கேட்டால் கூட யாரும் தர மாட்டார்கள். சினிமாக்காரர்களுக்கு வாடகை வீடு கூட கிடைக்காது. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் என்னை அடித்து வெளியே தள்ளியுள்ளார். என்னை அடித்து வெளியேற்றுகிறார்கள். இவ்வாறு வனிதா குமுறினார். இதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications