காமெடி பீஸு.. சிப்பு சிப்பா வருது.. திமுக தேர்தல் அறிக்கையை கிண்டலடிக்கும் விந்தியா!
கரூர்: திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என அக்கட்சியினர் கூறி வருகையில் அந்த அறிக்கையை பார்த்தாலே சிரிப்பு வருவதாக நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
திமுகவினர் தங்களின் தேர்தல் அறிக்கை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள். தேர்தல் அறிக்கை தான் ஹீரோ காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்ற அந்த தேர்தல் அறிக்கை ஒன்று போதும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரூரில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா கூறுகையில்,

திமுக தேர்தல் அறிக்கை
தமிழக மக்களுக்கு எதிராக செய்ததை எல்லாம் மறைத்து திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனக்கு பிடித்த காமெடி படம் ரஜினி நடித்த தில்லு முல்லு. ஆனால் அதை விட பெரிய காமெடி திமுகவின் தில்லுமுல்லு அறிக்கை. சில அறிக்கையை படித்தால் தான் சிரிப்பு வரும். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே சிரிப்பு வரும்.

கருணாநிதி
கருணாநிதி முதல்வரானால் என்ன செய்வார் என எனக்கு தெரியாது. ஆனால் அவர் முதல்வர் ஆவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

திமுகவினர்
திருடுவதற்காக திட்டமிட்டவர்கள் திமுகவினர். ஆனால் தற்போது திட்டங்களையே திருடுகிறார்கள். மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. கச்சத்தீவை தாரை வார்த்தது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது உள்ளிட்ட தமிழக மக்களுக்கு எதிரான செயல்களை திமுக செய்துள்ளது.

மது விலக்கு
மதுக் கடைகளை திறந்து வைத்தது திமுக தான். ஆனால் தற்போது மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறி வருகிறது. கொளுத்தும் வெயிலை கூட தாங்கலாம் போல ஆனால் திமுகவினர் கூறும் பொய்களை தாங்க முடியவில்லை.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications