கூடுதல் அம்மா உணவகங்களை தாயுள்ளதோடு திறக்கும் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அம்மா உணவகங்களை திறக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை மாநகரில் இப்போது இயங்கிவரும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1000 உணவகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் 124 நகராட்சிகளில் 360 அம்மா உணவகங்களும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு அம்மா உணவகமும் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஏழை-எளிய மக்களுக்கும், அன்றாடம் வேலைக்குச் செல்வோருக்கும், வெளியூர்களிலிருந்து சென்னையில் தங்கி இருந்து தொழில், வேலைகளில் ஈடுபடுவோருக்கும் அம்மா உணவகங்கள் பசி தீர்க்கும் தாய் வீடு போல திகழ்ந்து வருகிறது.
இந்த உணவகங்கள் நல்ல முறையில் சுகாதாரத்தோடு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான உணவகங்கள் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இவை அனைத்திற்கும் பாராட்டுக்குரியவர் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை துவக்கிவைத்த முதல்-அமைச்சர் தான். இதற்கென தமிழக மக்கள் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications