சுட்டெரிக்கும் "சூரியன்"... பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீரங்கம் கோவிலில் தரை விரிப்புகள்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் ஜெயலலிதாவின் வெற்றிக்காக சமீபகாலமாக கோவில் கோவிலாகச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் சசிகலா ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தார். மதிய வேளையில் அவர் கோவிலுக்கு சென்றதால், காலில் செருப்பில்லாமல் கோவில் பிரகாரங்களில் சுற்றி வர இயலாமல், சசிகலா மிகவும் தவித்தார்.

இதனால், கோவில் இணை ஆணையர் கோவில் பணியாட்டகளை் துணையோடு சசிகலா கோவிலினுள் செல்லும் இடங்களில் எல்லாம் தரை விரிப்புகளை விரித்து வைத்தனர்.
இது மற்ற பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. மற்ற பக்தர்கள் அனைவரும் கொளுத்தும் வெயிலில் நடக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்க, அவர்களைக் கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம், சசிகலாவிற்கு மட்டும் தரை விரிப்பு விரித்ததை அவர்கள் விமர்சித்தனர்.
பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், உற்சவங்கள், நம்பெருமாள் புறப்பாடு என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இது தவிர கோவிலில் உள்ள சிற்பங்கள், கலை வேலைப்பாடுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகிறார்கள்.
இப்படியாக கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் கோவில் வளாகத்தினுள் கால் வைக்க முடியாமல் வெயிலால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாக நடைபாதைகளில் கோடை வெயிலை சமாளித்து பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக ரூ.2.5 லட்சம் மதிப்பிளான தரை விரிப்புகள் புதிதாக போடப்பட்டுள்ளன.
இவை கோவில் வளாகம் முழுவதும் சுமார் 650 சதுர மீட்டர் பரப்பளவில் விரிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 அடி அகலம் கொண்ட இந்த தரை விரிப்புகள் தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
கோவில் வளாகத்தினுள் திறந்த வெளியில் போடப்பட்டுள்ள இந்த தரை விரிப்புகள், காலில் சூடு ஏற்படாமல் நடந்து செல்ல மிகவும் உதவியாக இருப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications