For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து தருமபுரம் திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதினங்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

Recommended Video

    ஆதினங்கள் கேள்வி! நாத்திகர்கள் மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது ஏன்? .. | Oneindia Tamil

    மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பல நூறு ஆண்டுகளாக குருபூஜை தோறும் நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீன மடாதிபதி பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை அடுத்து தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

    பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு! பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு!

    கண்டனம்

    கண்டனம்

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

    ஆதீனங்கள் சந்திப்பு

    ஆதீனங்கள் சந்திப்பு

    இதுகுறித்து தருமபுர ஆதீனம் மடாதிபதி, திருவாவடுதுறை ஆதினம் மடாதிபதி, செங்கோல் ஆதீனம் மடாதிபதி, தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி ஆகியோர் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், பண்டைய காலம் தொட்டு பல்வேறு தமிழ் நூல்களில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு

    குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு

    குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவை இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகிறது. மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்ச்சியாக இதனை பார்க்கக் கூடாது. தற்போது வரை சபரிமலையில் செல்லும் வயதானவர்களை டோலி எனப்படும் சாதனத்தில் தோளில் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது.

    ஆதீன மடம்

    ஆதீன மடம்

    ஆனால் ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சில மணி நேரங்கள் மட்டுமே இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மரபுவழி வழிபாடுகளில் யாரும் தலையிடக்கூடாது என்றும், கடவுள் மறுப்பாளர்கள் வழிபாட்டில் தலையிடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தி பல்லக்குத் தூக்கும் செல்லவில்லை என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    Adhinams says that Naathigas should not interfere in God's faith and they have no rights to do so.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X