ஆதி யோகி சிலை அமைந்துள்ள இடம் ஆன்மீக தலமாக மாறும்.. மோடி
சிவன் சிலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் மிகப் பெரிய ஆன்மீக தலமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை: 112 அடி சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் சிவன் சிலை திறக்கப்பட்டுள்ள இந்த இடம் மிகப் பெரிய ஆன்மீக தலமாக மாறும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மோடி மேலும் பேசியதாவது:
யோகா தற்போது பல வகைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. யோகா மிகவும் பழமையான ஒன்று. அதே வேளையில், புதுமையானதாகவும் யோகா திகழ்கிறது. அதே போன்று யோகா நிரந்தரமானது. ஆனால் தற்போதுதான் அது வளர்ந்து வருகிறது. யோகாவின் மிகப் பெரிய அழகே இதில்தான் இருக்கிறது.

யோகா போன்ற கலையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஜீவ நிலையிலிருந்து சிவன் நிலைக்கு உயர்த்துவதே யோகம். யோகா பயில்வதன் மூலம் மனம், உடல், புத்தி அனைத்தும் மேம்படும். என்னுள் என்பதில் இருந்து நம்மில் என விரிவடையும் பெயர் யோகா.
சிவன் என்றதும் அவர் குடியிருக்கும் இமயமலை நினைவுக்கு வருகிறது போல், பார்வதி என்றதும் கன்னியாகுமரிதான் நினைவுக்கு வருகிறது. மலையும், சமுத்திரமும் இணையும் அற்புதம் இந்தியாவில் நடக்கிறது. பாம்பும், எலியும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் சிவனிடம் பாம்பும், விநாயகரிடம் எலியும் உள்ளது. கார்த்திகேயனிடம் மயில் வாகனம் உள்ளது. இப்படி சிவ குடும்பம் நமக்கு வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்தை விளக்குகிறது என்று மோடி பேசினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications