விஜயகாந்த் அரசியல் வியாபாரி; பேரம் பேசி வருகிறார்: ஓ.பி.எஸ் தாக்கு !
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் வியாபாரி என்றும் அவர் தற்போது அரசியல் பேரம் பேசி வருவதாகவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. யார் யாருடன் கூட்டணி சேரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தமிழகத்தில் பெரிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நேரிடையாக தொடங்காமல் இருந்தன.

இதனிடையே திமுக தலைவர் கருணநிதியை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து திமுக. காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. தற்போது கூட்டணி மட்டும் உறுதியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் விஜயகாந்த் எப்படியும் திமுக கூட்டணிக்கு வந்துவிடுவார் என திமுக நம்புவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக மட்டும் மவுனமாக இருக்கிறது. ஒருவேளை தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணி குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மண்டல அதிமுக வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் முடிவும், மாற்றமும் மதுரையை மையமாக வைத்தே நடந்துள்ளது. அதிமுகவை முடக்க திமுக தலைவர் செய்த எத்தனையோ சோதனைகள், தடைகளை முதல்வர் ஜெயலலிதா தடுத்து இயக்கத்தைக் காப்பாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகளை சட்டத்தின் மூலம் சந்தித்து வெற்றி பெற்றுள்ளார்.
கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார். யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி. அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்த் அரசியல் வியாபாரி. அவர் அரசியல் பேரம் செய்கிறார். ஒரு நல்ல தீர்ப்பை மக்கள் தருவார்கள். அந்த தீர்ப்பை பெற தேர்தல் பணியாற்றுவோம்'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications